அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் ( FAQs )

மைகோல்ட்கார்ட் என்பது குந்தன் கோல்டு பிரைவேட் லிமிடெடின் ஒரு ஆன்லைன் இயங்குதளம் ஆகும். இது ஒரு ஆன்லைன் தளமாகும், இதன் மூலம் பயனர்கள் எப்போது வேண்டுமானாலும் அதாவது 24 X 7 இந்தியாவில் எங்கிருந்தும் எங்கும் செல்கையில் கூட, தங்கத்தை வாங்கலாம் / விற்கலாம், மேலும், குறைந்தபட்சமாக Re1 என்னும் அளவிற்கு மற்றும் அதிகபட்சமாக எந்த வரம்புக்கும்* எந்த மொபைல் செயலி மற்றும் வலைத்தளம் வழியாகவும் தங்கம் / வெள்ளி வாங்க மற்றும் விற்க இதன் மூலம் இயலும்.

குந்தன் குழுமம் குறித்த பொதுவான தகவல்கள் www.kundangroup.com இல் கிடைக்கும். குந்தன் குழுமத்தின் டிஜிட்டல் கோல்டு பிஸினஸ் குறித்து நீங்கள் அறிய விரும்பினால் எங்களது வலைத்தளத்தைக் காணவும்.

உங்கள் ஃபோனில் ஆப்ஸ்டோருக்குச் சென்று (ஆன்ட்ராய்ட் பயனர்களுக்கு கூகுள் ஆப் ஸ்டோர் மற்றும் iOS பயனர்களுக்கு ஆப்பிள் ஆப்ஸ்டோர்) ”மைகோல்டுகார்ட்” (“MyGoldKart”) செயலியைத் தேடுங்கள். நீங்கள் சரியான செயலியைப் பதிவிறக்கம் செய்கிறீர்கள் என்பதை உறுதி செய்வதற்கு, திரையில் தெரியும் லோகோவை மீண்டும் சரிபார்த்து அதன் வெளியீட்டாளர் Kundan Group TM என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

உங்கள் KYC ஐ பூர்த்தி செய்வது பின்வரும் சூழ்நிலைகளில் கட்டாயமாகிறது:- நீங்கள், தங்கம்/வெள்ளியை ரூ. 1,99,000 இற்கும் மேலான மதிப்பில் வாங்க வேண்டும் என்றால். நீங்கள், ரூ.1,99,000 இற்கும் மேலான மதிப்பில் தங்கம்/வெள்ளி நகை, காயின் அல்லது பாரை ஆர்டர் செய்தால்/வாங்க வேண்டும் என்றால். நீங்கள், ரூ.1,99,000 இற்கும் மேலான மதிப்பில் தங்கம்/வெள்ளி நகை, காயின் அல்லது பாரை விற்க வேண்டும் என்றால். நீங்கள், ரூ. 1,99,000 என்கிற வேலட் வரம்பை நீங்கள் அடைகிறீர்கள் என்றால்

ஆம், உங்கள் முதலீடுகள் 100% பாதுகாப்பாக இருக்கும் என்பது குறித்து நீங்கள் உறுதியான நம்பிக்கையுடன் இருக்கப் பல காரணங்கள் உள்ளன. முதலாவதாக, மைகோல்டுகார்ட் செயலியின் மூலம் செய்யப்படுகிற அனைத்து முதலீடுகளுக்குமான பொறுப்பேற்புத் தன்மை மூன்றாம் தரப்பினர்/சுயாதீன டிரஸ்டியைச் சேர்ந்தது. இரண்டாவதாக, வாங்கப்பட்ட பொருட்கள் சர்வதேச அளவில் பெயர் பெற்ற முகமையான BRINKS ஆல் உயர்பாதுகாப்பு முறையில் காக்கப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு வாங்குதல்/விற்பனைக்குப் பின்னும், பின்வரும் ஆவணங்களை நீங்கள் பெறுவதை எதிர்பார்க்கலாம்: மைகோல்டுகார்ட் இயங்குதளத்தைப் பயன்படுத்தி வாங்கிய/விற்ற தங்கம்/வெள்ளிக்கான தொகை, அதன் அளவு ஆகியவற்றைக் குறிப்பிட்டு இருக்கக்கூடிய ஜி.எஸ்.டி/வரி இன்வாய்ஸ். வாடிக்கையாளர் செய்த பரிவர்த்தனையின் படியான கொள்முதல்/விற்பனை விவரங்களை சான்றளித்து மூன்றாம் தரப்பு டிரஸ்டியால், இந்நிகழ்வில் அது ஐடிபிஐ வங்கியால் வழங்கப்பட்ட சான்றிதழ். வாடிக்கையாளர்களின் முதலீடுகளைப் பாதுகாக்க, ஐடிபிஐ வங்கி ஒரு சுயாதீன டிரஸ்டியாக பணியாற்றும், மேலும் வாடிக்கையாளர்கள் சார்பாக செயல்பட்டு அவர்களின் நலன்கள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐடிபிஐ வங்கி டிரஸ்டி வாடிக்கையாளர் வாங்கிய புல்லியன் (அதாவது தங்கம் / வெள்ளி) மீது முதல் மற்றும் பிரத்தியேக பொறுப்பைக் கொண்டுள்ளது. விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டவுடன், வாடிக்கையாளர்கள் குந்தன் கோல்டு பிரைவேட் லிமிடெட்-ஐ பொருள்ரீதியான புல்லியனை வாடிக்கையாளரின் சார்பாக ஒரு பாதுகாப்புப் பெட்டகத்திடம் டெலிவரி செய்வதற்கு அதிகாரம் அளிக்கிறார், இது சுயாதீன டிரஸ்டியால் சரிபார்க்கப்படும்.