about-us

எங்களை பற்றி

குந்தன் மை கோல்ட் கார்ட் ஐ தொடங்கியது

நவீன டிரெண்டுகள் மற்றும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப, குந்தன்கோல்டு (KundanGold) இப்போது தனது சொந்த புது யுக டிஜிட்டல் கோல்ட் மற்றும் சில்வர் இயங்குதளமான – மைகோல்ட்கார்ட் – ஐ தொடங்கியுள்ளது. எம்ஜிகே தனது வாடிக்கையாளர்களுக்கு எளிதில் இயக்கக்கூடிய இன்டர்ஃபேஸை வழங்குவதற்காக வியூகத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், வாடிக்கையாளர்கள் ஒரே இயங்குதளத்தில் மார்க்கெட்களை ஆய்வு செய்யவும், ரியல் டைம் தங்க மற்றும் வெள்ளி விலைகளை பார்க்கவும், குறுகிய கால மற்றும் நீண்ட கால முதலீடுகளை தங்கம் மற்றும் வெள்ளியின் மீது தங்கள் விரல் சொடுக்கிலேயே செய்யவும் ஏதுவான ஒரு தனிநபர் முதலீட்டு ப்ளானராகவும் செயல்படுகிறது இந்த இயங்குதளம் ப்ரவுஸர்களில் செயல்படும் என்பதோடு அழகாக வடிவமைக்கப்பட்ட செயலியாக ஐஓஸ் மற்றும் ஆன்ட்ராய்டில் உள்ளது. தங்கத்தில் ஆர்வமுள்ள அனைத்து முதலீட்டாளர்களும் இதை எளிதில் அணுக ஏதுவாக உள்ளது..

தங்கத்தில் முன்னோடியான குந்தன் குறித்து,

குந்தன் ரீஃபைனரி பிரைவேட் லிட்., 2 பத்தாண்டுகளுக்கும் மேலாக தங்கம் துறையில் மிகப் பிரசித்தி பெற்ற நற்பெயர் பெற்ற நிறுவனமாக உள்ளது என்பதோடு சுரங்கம், சுத்திகரிப்பு, வடிவமைப்பு மற்றும் உற்பத்தி என கோல்டு வேல்யூ செயினின் அனைத்து அம்சங்களிலும் தன்னுடைய இருப்பைக் கொண்டுள்ளது. குந்தன் ரீஃபைனரி தங்களுடைய தொழில்நுட்பம், துறைசார் அறிவு, பின்புல அணிகள், செயலாக்கம் மற்றும் வடிவமைப்பு திறனை ஆண்டுக்கு ஆண்டு தொடர்ச்சியாக மெருகேற்றிக் கொண்டே வந்துள்ளது.

டிஜிட்டல் தங்கம்

வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் டிஜிட்டல்மயமாக்கல் பரவும் இவ்வேளையில், கடந்த சில ஆண்டுகளில் புதிய மிகவும் திறன் வாய்ந்த எளிமைப்படுத்தப்பட்ட முதலீட்டு முறைகள் உருவாகியுள்ளன. அத்தகைய ஒரு முதலீட்டு கருவி தான் டிஜிட்டல் தங்கம் மற்றும் வெள்ளி. தங்கள் போர்ட்ஃபோலியோவை பரந்துபட்டதாகவும் பாதுகாப்பானதாகவும் ஆக்க எண்ணும் முதலீட்டாளர்களுக்கு இது ஒரு எளிதான, வெளிப்படையான மற்றும் சிக்கனமான தெரிவாக உருவாகியுள்ளது..

vision

நோக்கு

நிலையற்ற காலங்களில் ஒரு தனிப்பட்ட முதலீட்டு திட்டமிடும் கருவியாக இருக்க எம்ஜிகே முயல்கிறது. இதன் காரணமாக தங்கம்/வெள்ளி டிரேடிங் மற்றும் முதலீடு செய்தல், அனைவருக்கும் மன அழுத்தமில்லாத, மலிவு மற்றும் லாபகரமான செயல்முறையாக அமைகிறது.

எம்.ஜி.கே. என்ன செய்யும்?

இன்றைய காலகட்டத்தில் உங்கள் சேமிப்பிலிருந்து அதிகமானதைப் பெறுவதோடு, ​​தங்கத்தில் முதலீடு செய்வதற்கு குறைவான செலவில் சிறப்பான வழி எம்.ஜி.கே ஆகும்.

about buy
வாங்குவது

எம்.ஜி.கே வலைத்தளம் அல்லது செயலியை கிளிக் செய்து எப்போது வேண்டுமானாலும் எங்கும் டிஜிட்டல் தங்கம் / வெள்ளி வாங்கவும்

about gift
பரிசு

உங்கள் அன்புக்குரியவர்களுக்கு தங்கம் / வெள்ளியை பரிசளிக்கவும்.

about sell
விற்பது

உங்கள் டிஜி தங்கம் / வெள்ளி ஆன்லைனில் எப்போது வேண்டுமானாலும் விற்கவும்

about delivery
டெலிவரி

எந்த நேரத்திலும் தங்கம் அல்லது வெள்ளி உங்கள் வீட்டிற்கே நேரடியாக பொருள் வடிவில் டெலிவலி செய்யப்படும்.

about redeem
மீட்பது

எங்கள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் கூட்டாளர்களிடமிருந்து எப்போது வேண்டுமானாலும் திரட்டப்பட்ட தங்கம் அல்லது வெள்ளியை மீட்டெடுக்க வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யலாம்.

about plan
எம்.ஜி.கே ப்ளான்கள்

மலிவு விலையில், லாக்கின் காலம் அற்ற தங்கம்/வெள்ளி முதலீட்டு பிளானை ஒரு க்ளிக் செய்வதன் மூலம் நீங்கள் தேர்ந்தெடுக்க முடியும், மற்றவற்றை எம்ஜிகே இடம் நீங்கள் விட்டுவிடலாம்.

இது எவ்வாறு வேலை செய்கிறது

about how

மைகோல்ட் கார்ட் செயலியை ஆன்ட்ராய்டு அல்லது ஐஓஎஸ் ஆப் ஸ்டோரில் பதிவறக்கம் செய்யுங்கள் அல்லது வலைதளத்திற்கு செல்லுங்கள்.

about how

பதிவு செய்யவும் மற்றும் உங்கள் அடையாளத்தை சரிபார்க்கவும்

about how

ஒரே சொடுக்கின் மூலம் 24K தங்கம்/வெள்ளியை வாங்கவும் அல்லது விற்கவும்

about how

பொருள் வடிவிலான தங்கத்தை காப்பீடு செய்யப்பட்ட 100% பாதுகாப்பான வால்டுகளில் சேர்த்து வைக்கவும்.

about how

உங்கள் வசதிக்கு ஏற்ப மீட்டுக் கொள்ளவும்..

ஏன் எம்.ஜி.கே? தூய்மை, பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பம்

கடுமையான தரப்பரிசோதனைகள் செய்வது, எங்களது இன்டர்ஃபேஸ் மற்றும் பேக்-என்ட் சிஸ்டங்களை தொடர்ச்சியாக முன்னேற்றுவது, அதன் மூலம் நேவிகேஷன் மற்றும் டிரேடிங் செயல்முறையை எளிதாகவும், சிக்கலற்றதாகவும் மற்றும் பாதுகாப்பானதாகவும் ஆக்குவது ஆகியவற்றைச் செய்வதன் மூலம் எங்களது நீண்ட கால கொள்கையான தூய்மை மற்றும் தனிச்சிறப்பு என்பதை பின்பற்றுகிறோம். வாடிக்கையாளர்கள் முழு நம்பிக்கையுடன் டிரேட் செய்வது மற்றும் முதலீடு செய்வதை ஏதுவாக்கும் விதமாக எங்கள் வாடிக்கையாளர்களின் செல்வத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய ஒவ்வொரு படியிலும், நவீன தொழில்நுட்பம் மற்றும் பார்ட்னர்ஷிப்கள் கொண்டு செயல்படுவதில் பெருமை கொள்கிறோம்.

  • kundan

    எங்கள் புராடக்டுகளின் தூய்மைக்கான உத்தரவாதத்திற்காக தங்கத்துறையில் முன்னோடியும் நற்பெயர் பெற்றதுமான, குந்தன் ரீஃபைனரி இடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்கிறோம்.

  • brinks

    உலகளாவிய அளவில் முன்னிலை வகிக்கும் லாஜிஸ்டிக்ஸ் மற்றும் சேஃப் வால்டு வழங்குநரான எங்களது பாதுகாப்பு கூட்டாளர் BRINKS வழங்கும் உயர் பாதுகாப்பு வால்டுகளில் வைத்து எங்களது வாடிக்கையாளர்களின் அனைத்து தங்கம்/வெள்ளி பாதுகாக்கப்படுகிறது.

  • bvc

    இந்தியாவில் எங்கும் டெலிவரி செய்வதற்கு, எங்கள் போக்குவரத்தை பாதுகாப்பாக வைத்திருக்க நாங்கள் நம்பகமான கூட்டாளரான பிவிசி (BVC) லாஜிஸ்டிக்சை நாங்கள் நம்புகிறோம்.